தினபலன்
கன்னி - 27-01-2023
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும்.
ஹஸ்தம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள்.
சித்திரை 1, 2 பாதங்கள்: புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9