திரிபுரோத்ஸவ்

திரிபுரோத்ஸவ்

ஆன்மிகம்

“த்ரிபுரோத்ஸவ்...!” எங்கே?

தீபாவளி சென்று 15ஆம் நாள் வரும் பெளர்ணமியன்று வாரணாசியில் கொண்டாடப்படும் கோலாகல உற்சவம், திரிபுர பூர்ணிமா; தேவ் தீபாவளி; த்ரிபுரோத்ஸவ் என அழைக்கப்படுகிறது. காரணம்...?

சிவபெருமான் த்ரிபுராசுரனை வதம் செய்த தினமான இந்நாளில், இறைவன் மேலுலகிலிருந்து இறங்கி வந்து கங்கையில் ஸ்நானம் செய்வதாக ஐதீகம்.

பெளர்ணமியன்று கங்கை ஸ்நானம் செய்வது ‘த்ரிபுர பூர்ணிமா ஸ்நான்’ எனக் கூறப்படுகிறது.

ரவிதாஸ் காட் முதல் ராஜ்காட் வரை சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விளக்குகளை கங்கை நதிக்கரைகளில் வைத்து, கங்கா மாதாவுக்கு ஆரத்தி எடுக்கப்படும்.

விபரங்கள்...?

1958ஆம் ஆண்டு பஞ்சகங்கா காட்டில் (ghat) சிறிய அளவில் விளக்கேற்றும் செயல் ஆரம்பமாகி, இன்று லட்சத்தைத் தாண்டிவிட்டன.

பெளர்ணமி நிலைவக் கண்டபின், அநேகர் மண்சட்டிகளில் எண்ணெய் விட்டு, தீபமேற்றி வைத்து வழிபடுகின்றனர். வீடுகள் தோறும் வண்ணக் கோலங்கள்; ஒளிவிடும் விளக்குகள் ஆகியவைகள் சுற்றலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் அமைந்திருக்கும்.

தவிர, வேதமந்திரங்கள் ஒதுவது, அகண்ட ராமாயணம் படிப்பது. கடவுள் சிலைகளை எடுத்துக்கொண்டு ஊர்வலம் வருவது; அழகாக அலங்கரிக்கப்பட்ட விளக்குகளை 24 பூசாரிகள் கைகளில் ஏந்தி கங்கா ஆர்த்தி எடுப்பதென அனைத்துமே பார்க்க, ரசிக்க, அற்புதமாக இருக்கும்.

விருது வழங்கல்:

த்ரிபுர பூர்ணிமா நகளில்  ஆர்மி; நேவி, ஏர்ஃபோர்ஸ் போன்றவைகளில் பணிபுரிந்து வீர மரணமடைந்த வர்களுக்கு “கங்கா ஸேவா நிதி அமைப்பு”, “பாரதிய ஷெளர்ய சம்மான்” விருதினை வழங்கி வருகிறது.

கங்கைக் கரையோரங்களில் ஜொலிக்கும் தீபங்களைக் காண படகு சவாரியும் உள்ளது.

அமாவாசையில் வருவது தீபாவளி! பெளர்ணமியில் தேவ் தீபாவளி!

உபரி தகவல் பின்குறிப்பு: சமீபத்தில் தீபங்களன் திருவிழாவான தீபாவளியன்று, அயோத்தியிலுள்ள ராம்கி பைரி” காட்டில் கின்னஸ் சாதனைக்காக 12 லட்சத்துக்கும் மேல் தீபங்கள் சுமார் 30 நிமிடங்கள் ஏற்றி வைக்கப்பட்டு, விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com