பரிகாரமும் நேர்த்திக்கடனும்!

spirituality image
spirituality image

ன்மிகத்துல இன்றைக்குப் பல பேருக்கு இருக்கிற சந்தேகம் என்னன்னா, பரிகாரத்துக்கும் நேர்த்திக்கடனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன அப்படிங்கறதுதான். பரிகாரம் அப்படிங்கறது, ஒருத்தரு தான் செய்த தவறான செயல்களால அவருக்கு ஏற்பட்ட பாவங்களுக்கு அவரே செய்து கொள்ளும் பிராயச்சித்தம் அப்படின்னு சொல்லலாம்.

உதாரணத்துக்கு, ஒருத்தரோட தவறான நடவடிக்கையால உண்டான உடல் நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்வது மாதிரி அப்படின்னும் சொல்லலாம் அல்லது தெரிஞ்சே ஒருத்தருக்கு உடலாலோ, மனதாலோ கெடுதல் செஞ்சு, அதனால உண்டான பாவத்துக்குப் பிராயச்சித்தமா பாதிக்கப்பட்டவங்க மனசு குளிரும்படி நல்லது செய்யறதை பரிகாரம் அப்படின்னு சொல்லலாம்.

நேர்த்திக்கடன் அப்படிங்கறது என்னன்னா, கல்யாணம், கிரகப்பிரவேசம், குழந்தை பாக்கியம் இந்த மாதிரி சில ஆசைகள் நிறைவேறணும் அப்படிங்கறதுக்காக கடவுள்கிட்ட, ‘என்னோட இந்த ஆசை நிறைவேறினா, அதுக்கு பதிலா இதை நான் உனக்குச் செய்கிறேன்’ அப்படின்னு வேண்டிக்கிட்டு, அந்த விருப்பம் அல்லது வேண்டுதல் நிறைவேறினதும், தான் சொன்னபடியே அந்த தெய்வத்துக்கு செய்ய வேண்டிய அபிஷேகம், அர்ச்சனை, படையல் மாதிரியான விஷயங்களை செய்றதுதான் நேர்த்திக்கடன்.

அதாவது இதை சுருக்கமா சொல்லணும்னா, ஒருத்தர்கிட்ட நாம் வாங்கிய கடனை சொன்னபடியே திருப்பித் தருவது மாதிரி என்று கூடச் சொல்லலாம். கடவுள்கிட்ட நேர்ந்துக்கிட்டு (வேண்டிக்கிட்டு) செய்யறதால இது நேர்த்திக்கடன் அப்படின்னு சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com