ஒருமுறை ஆங்கிலேயர் ஒருவர் காந்திஜியிடம், “எங்கள் நாட்டில் நாங்கள் அனைவரும் ஒருமுறை ஆங்கிலேயர் ஒருவர் காந்திஜியிடம், “எங்கள் நாட்டில் நாங்கள் அனைவரும் ஒரே நிறமாக இருக்கிறோம். ஆனால் இந்தியர்கள் வெவ்வேறு நிறங்களில் இருக்கிறீர்களே?” எனக் கேட்டாராம். அதற்கு காந்திஜி, “கழுதைகள் எல்லாம் ஒரே நிறமாக இருக்கும். ஆனால் குதிரைகளோ பல நிறங்களில் உள்ளன”, என்றாராம். - ஆர். பஞ்சவர்ணம், போளூர்.

 

மலேசியாவின் மிகப்பெரிய நகரமான கோலாலம்பூர் நகருக்கு 15 கி.மீ. தொலைவில், மலேசியாவின் மிகப்பெரிய நகரமான கோலாலம்பூர் நகருக்கு 15 கி.மீ. தொலைவில், தண்டாயுதபாணி கோயிலின் மலை அடிவாரத்தில் 42.7 மீட்டர் (141அடி) உயரமுள்ள முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே உள்ள உயரமான முருகன் சிலை ஆகும். இதற்கு 1,550 க.மீ. காங்கிரீட்டும, 350டன் இரும்பும், 300 லிட்டர் பெயிண்ட்டும் உபயோகப்படுத்தப்பட்டன. - கே. கமலி, சென்னை.

 

ரூபாய் நாணயங்களில் முதன்முதலில் உருவப் படங்களை பொறித்து அறிமுகப்படுத்தியவர் மாவீரன் ரூபாய் நாணயங்களில் முதன்முதலில் உருவப் படங்களை பொறித்து அறிமுகப்படுத்தியவர் மாவீரன் அலெக்சாண்டர். இவர் கி.மு. 326-ல் தனது உருவம் பொறித்த நாணயங்களை முதன் முதலாக வெளியிட்டார். - ஏ.ஜி. மஹமுதா தௌபீக், மேலப்பாளயம்.

 

பொதுவாக வெண்புள்ளிகள் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த வைத்தியம் அருகம்புல். அதன் பொதுவாக வெண்புள்ளிகள் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த வைத்தியம் அருகம்புல். அதன் சாற்றை தினசரி 25-50 மி. வீதம் இருவேளையும் அருந்தி வந்தால் நாளடைவில் குணமாகும். சற்று காலதாமதம் ஆனாலும் குணமடைவது நிச்சயம். இதை ஜனகரின் குலகுரு யாக்ஞவல்கியர் சொல்லியிருக்கிறார். - வசந்தா வில்வநாதன், திருப்பத்தூர்.

 

தமிழ்நாட்டில் காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் சாலையிலுள்ள சிவன் மலை 478 தமிழ்நாட்டில் காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் சாலையிலுள்ள சிவன் மலை 478 படிக்கட்டுக்களைக் கொண்ட மலை ஆகும். இங்குள்ள முருகன் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களுடன் விளங்குகிறார்! பக்தர்கள் இவருக்கு வெண்ணெய் தயிர் ஆகியவற்றுடன் மிதிவண்டி சைக்கிளைக் கூட காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இப்படியும் ஒரு காணிக்கை. - மு.ரா.பாலாஜி, கோலார் தங்க வயல்.