டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கொரோனா: வீட்டில் தனிமை!

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கொரோனா: வீட்டில் தனிமை!

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டுத் தனிமையில் உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

.

டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அங்கு இரவுநேர ஊரடங்கு, பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் புதிதாக 4,099 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் 11 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது:

எனக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டும் இருப்பதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப் படுத்திக்கொண்டு பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக டேராடூன் நகரில் நேற்று நடந்த நவ் பரிவர்த்தன் யாத்ராவில் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று பங்கேற்றுப் பேசினார்.

இதுகுறித்து பாஜக தலைவர் கபில் மிஸ்ரா தன் ட்விட்டரில் பதிவிட்டதாவது:

டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் கேஜ்ரிவால் கொரோனாவிலிருந்து விரைவில் மீண்டுவர பிரார்த்திக்கிறேன். ஆனால் அவர் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்குச் சென்ற நிலையில் அங்கெல்லாம் கேஜ்ரிவால் கொரோனாவை பரப்பியுள்ளார். அந்தவகையில் அவர் சூப்பர் பரப்புனர்.

இவ்வாறு தலைவர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com