அக்டோபர் 3-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

அக்டோபர் 3-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

தமிழகத்தில் அக்டோபர் 3-ம் தேதி மீண்டும்  4-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 3 முறை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில்  4-வது முறையாக தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்டோபர்- 3) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் 24.98 லட்சம் தடுப்பூசிகள் இருப்பதால் நாளை மறுநாள் 20 ஆயிரம் மையங்களில் முகாம் நடத்தப்படுகிறது. அதையடுத்து திங்கட்கிழமை தடுப்பூசி முகாம்களுக்கு விடுமுறை வழங்கப்படும். அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

-இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணீயன் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com