நலமும் வளமும் பெருகட்டும்: பிரதமர் மோடி நவராத்திரி நல்வாழ்த்து!

நலமும் வளமும் பெருகட்டும்: பிரதமர் மோடி நவராத்திரி நல்வாழ்த்து!

இன்று நவராத்திரி திருவிழா தொடங்குவதை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நல்வாழ்த்து தெரிவித்துள்லார்.

நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்தென்னிந்தியாவில் மட்டுமன்றி வடமாநிலங்களிலும் நவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.அந்த வகையில் முப்பெரும் தேவியரை போற்றி வழிபடும் நவராத்திரி விழா இன்று முதல் 15-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையின்போது, ஆலயங்களிலும் வீடுகளிலும் பூஜைகள், வழிபாடுகள் களைகட்டும். அந்த வகையில் இன்று நவராத்திரியின் முதல் நாளை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி திருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி திருவிழா வாழ்த்துக்கள் அடுத்து வரும் நாட்களில் ஜனனி மாதாவை பக்தியுடன் நாம் வழிபட வேண்டும். இந்த நவராத்திரி திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளம் ஆகியவற்றை கொண்டுவரட்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது நவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com