நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் எழுதுவதற்கான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளீயிடப்பட்டது.

இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் பரீட்சைக்கான  ஹால் டிக்கெட் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை மாணவர்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்கிடையே, கரோனா பரவலால் இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு  ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் செப்டம்பர் 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற்றது. இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று இரவு வெளியானது. இதை மாணவர்கள் https://admissions.nic.in/admit/neetadmitcard/DownloadAdmitCard/logindob.aspx?enc=WPJ5WSCVWOMNiXoyyomJgATm16WDSuAdfwpi7ZXy4cMJM6H2YIPeeiD4L60oHIp0 என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டியது அவசியம். நீட் முதுகலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டும் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com