கண்ணை கவரும் ரோஸ் மில்க் ரசகுல்லா...!

rose milk rasagulla
rose milk rasagulla

- இளவரசி வெற்றி வேந்தன்

பால் - 1/2 லிட்டர்
ரோஸ்மில்க் ஃபிளேவர் - 3 டீஸ்பூன்
வினிகர் - 1டீஸ்பூன்
சீனி - 1/2 கப்
தண்ணீர் -1 1/2 கப்

பாலை காய்ச்சவும். பால் நன்கு காய்ந்தபின் ரோஸ்மில்க் ஃபிளேவர் சேர்க்கவும்.

1 நிமிடம் கழித்து வினிகர் சேர்க்கவும்.நன்கு கலந்து இறக்கி மெல்லிய வெண்துணியில் வடிகட்டி வைக்கவும்.

20 முதல் 30 நிமிடம் கழித்து எடுத்து கைகளால் மென்மையாக பிழிந்து தனியே எடுக்கவும்.

பனீரை கைகளால் ஒன்று சேர நன்றாக பிசைந்து கொள்ளவும்.

1/2 கப் சீனியை 1 1/2 கப் தண்ணீரில் கலந்து அகலமான பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும்.

ரோஸ்மில்க் பனீரை நமக்கு விருப்பமான வடிவத்தில் தயார் செய்து கொதிக்கும் சீனி பாகில் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் மூடி கொதிக்கவைத்து இறக்கவும்.

நாவில் நீர் ஊற வைக்கும் சுவையான ரோஸ் மில்க் ரசகுல்லா ரெடி

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com