முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று 69-வது பிறந்தநாள்; பிரதமர் வாழ்த்து!

முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று 69-வது பிறந்தநாள்; பிரதமர் வாழ்த்து!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று 69வது பிறந்த நாள் கொண்டாடுவதையொட்டி, அறிஞர் அண்ணா, பெரியார் மற்றும் கலைஞர் கருணாநிதி, ஆகியோர் நினைவிடங்கலில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முத்லவர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்த வாழ்த்து செய்தி:

தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தாங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

-இவவாறு பிரதமர் மோடி முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு முதல்வர் 'தங்களின் ஒத்துழைப்புடன் நான் தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பேன்' என உறுதியளித்தார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com