19 மாதங்களுக்குப் பின் விடுதலை: ஈரான் சிறையிலிருந்து தமிழகம் திரும்பிய மீனவர்கள்!

19 மாதங்களுக்குப் பின் விடுதலை:  ஈரான் சிறையிலிருந்து தமிழகம் திரும்பிய மீனவர்கள்!

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 மாதங்களுக்குப் பிறகு விடுதலை கிடைக்கப் பெற்று இன்று தமிழகம் திரும்பினர்.

குவைத் நாட்டைச் சேர்ந்த மீன்பிடி குழுமம் ஒன்றில் நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 9 பேர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் குவைத்தில் மீன்பிடிப்பதற்காக சென்றபோது ஈரான் கப்பல் படையினர் இந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கைது செய்தனர்.அதையடுத்து கடந்த 19 மாதங்களாக ஈரானில் அவர்கள் அவர்கள் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த 9 மீனவர்களும் இன்று சென்னை வந்து சேர்ந்தனர்.

இதுகுறித்து, அந்த  மீனவர்கள் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:

வாழ்வாதாரத்தைப் பெருக்க குவைத் சென்ற எங்களை ஈரான் அரசு கைது செய்து 19 மாதங்களாக சிறையில் வைத்திருந்தது. எங்களை விடுவிக்கக் கோரி தமிழக அரசு எடுத்த முயற்சிகளுக்கு நன்றி.

-இவ்வாறு தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com