சென்னை காவல்துறை அருங்காட்சியகம்: கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு தடை!

சென்னை காவல்துறை அருங்காட்சியகம்: கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு தடை!

சென்னை காவல்துறை அருங்காட்சியகத்தில் கமல்ஹாசன் படத்தின் படப்பிடிப்பு நடத்த காவல்துறை ஆணையர் அனுமதி மறுத்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமலஹாசன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம்  படத்தின் படப்படிப்பு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை எழும்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் அருங்காட்சியத்தில் படப்படிப்பு நடத்த அனுமதி கேட்டு ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நிர்வாக தயாரிப்பாளர் செந்தில் காவல் ஆணையரிடம் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.

அதற்கு அனுமதி மறுத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் தெரிவித்ததாவது:

இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு அனுமதி மறுக்கப் படுவதற்கான காரணம், சென்னையில் கொரோனா தடையுத்தரவு நாளை வரை (அக்டோபர்  31) அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் பொது இடங்களில் சமூக, அரசியல், பொழுதுபோக்கு, ஆன்மீக நிகழ்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு இடங்களில் தனியார் நிகழ்ச்சிகள் நடத் அனுமதி மறுக்கப்படுகிறது.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com