ஐபிஎல் 15-வது சீசன்: கோடிகள் கொடுத்து வீரர்களை வாங்க அணிகள் முயற்சி!

ஐபிஎல் 15-வது சீசன்: கோடிகள் கொடுத்து வீரர்களை வாங்க அணிகள் முயற்சி!

ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் போட்டிகளுக்கு பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு அணியும் வீரரக்ளை தேர்வு செய்யும் மெகா ஏலம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தெரிவித்ததாவது:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஏற்கனவே உள்ள அணிகளூடன் இந்த வருடம் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைந்துள்ளது. அந்த வகையில் மொத்தம் 10 அணிகள் இந்த சீசனில் பங்கேற்க உள்ளது. ஐபில் 15-வது சீசன் போட்டிகளுக்காக இந்த 2 புதிய அணிகள் உட்பட வீரர்களைத் தேர்வு செய்ய மெகா ஏலம் நடக்கவுள்ளது. ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் கே எல் ராகுலை 20 கோடி ரூபாய்க்கும் ரஷித் கானை 16 கோடிக்கும் ஏலத்தில் வாங்க லக்னோ அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே எல் ராகுல் ஐபிஎல் 2018-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்களை குவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com