பனிப்பொழிவால் பந்தை பிடிக்க முடியவில்லை: சிஎஸ்கே தோல்வி குறித்து கேப்டன் ரவீந்திர ஜடேஜா!

பனிப்பொழிவால் பந்தை பிடிக்க முடியவில்லை: சிஎஸ்கே தோல்வி குறித்து கேப்டன் ரவீந்திர ஜடேஜா!

ஐபிஎல் 15-வது தொடரின் 7-வது போட்டி நேற்று மும்பையில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் இடையில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக உத்தப்பா 50 ரன்களும், சிவம் துபே 49 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, சென்னை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 19.3 ஓவரில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. லக்னோ அணியில் அதிகபட்சமாக டி காக் 61 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத லீவிஸ் 55 ரன்களும் எடுத்தனர்.

இந்தநிலையில், லக்னோ அணியுடனான இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறியதாவது:

மும்பையில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பந்துவீச்சின்போது பந்தை சரியாக பிடிக்க கூட முடியவில்லை. பேட்டிங்கைப் பொறுத்தவரை சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடினோம். குறிப்பாக உத்தப்பாவும், சிவம் துபேவும் சிறப்பாக ஆடினர். ஆனால் பீல்டிங்கில் சொதப்பிவிட்டோம், சில கேட்ச்களை தவறவிட்டு விட்டோம், டி.20 போட்டிகளில் ஒரு கேட்ச் மிஸ் பண்ணினாலும், அது போட்டியையே மாற்றிவிடும்.

மேலும் மும்பையில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருந்ததால், பந்தை எங்களால் சரியாக பிடிக்க கூட முடியவில்லை. அடுத்த போட்டிக்கு முன்பு ஈரமான பந்துகளில் அதிக பயிற்சிகள் மேற்கொள்வோம்.

-இவ்வாறு சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com