சசிகலாவை பிஜேபி-யில் சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்: அண்ணாமலை!

சசிகலாவை பிஜேபி-யில் சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்: அண்ணாமலை!

பிஜேபி-யில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சி மேலிடமதான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்த்தால் அக்கட்சி வலுவடையும். அப்படி அதிமுக-வில் சேர்க்காத பட்சத்தில் சசிகலாவை பிஜேபியில் சேர்க்க முயற்சிப்போம் என்றார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் அவர் இன்று திருச்சி வந்தபோது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை கூறியதாவது:

பாஜகவுக்கு சசிகலா வந்தால் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. இந்த விஷயத்தில் தனி மனிதர்கள் யாரும் முடிவெடுக்க முடியாது. கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்.

-இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com