விநாயகர் உருவம் பொறித்த தங்கக் காசு: பிரிட்டன் வெளியீடு!

விநாயகர் உருவம் பொறித்த தங்கக் காசு: பிரிட்டன் வெளியீடு!

பிரிட்டனைச் சேர்ந்த 'ராயல் மின்ட்' நிறுவனம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் அரண்மனையைச் சேர்ந்த ராயல் மின்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

கடந்த ஆண்டு தீபாவளிக்கு மகாலட்சுமி உருவத்துடன் கூடிய  தங்கக் கட்டிகளை எங்கள் நிறுவனத்தில் வெளியிட்டோம். அந்த வகையில் ஆகஸ்ட் 31-ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டிகள்  தயாரிக்கப்பட்டுள்ளது.24 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட இந்த தங்க கட்டியின் எடை 20 கிராம்.

இதன் விலை ஒரு லட்சத்து 6543 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வலைதளம் வாயிலாக தங்கக் கட்டிக்கு பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.சென்றமுறை  மகாலட்சுமி உருவம் பொறித்த தங்கக் கட்டியை வடிவமைத்த எம்மா நோபல் என்பவர் தான் இந்த விநாயகர் உருவத்துடன் கூடிய தங்கக் கட்டியை வடிவமைத்துள்ளார்.

வேல்ஸ் பிராந்தியத்தின் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலைச் சேர்ந்த நிலேஷ் கபாரியா விநாயகர் தங்க கட்டியை வடிவமைக்க உதவியுள்ளார். இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

-இவ்வாறு ராயல் மின்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com