தபால் நிலையங்களில் இன்றுமுதல் தேசியக் கொடி விற்பனை!

தபால் நிலையங்களில் இன்றுமுதல் தேசியக் கொடி விற்பனை!

நாட்டில் மொத்தமுள்ள 1 லட்சத்து 60 ஆயிரம்  தபால் நிலையங்களிலும் இன்றுமுதல் நேரிலும் மற்றும் ஆன்லைனிலும் இந்திய தேசிய கொடியை விற்பனை செய்யப்பட  உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நாட்டில் அனைவரும் தம் வீடுகளில் இந்திய தேசிய கொடியை ஏற்றும்படி பிரதமர் மோடி அறிவித்தார்.அதன்படி கடந்த ஜூலை 20- ம் தேதி இந்திய அரசு புதிய அறிவிப்பாணை வெளியிட்டது.

அதன்படி ஒவ்வொரு தனி நபரும் அவரவர் வீட்டில், வெட்ட வெளியில் நாள் முழுவதும் தேசிய கொடியை ஏற்றிக்கொள்ள அனுமதிக்கப் படுகின்றனர். இதற்கு முன்பு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற அனுமதி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் இன்றுமுதல் தேசிக் கொடிகள் விற்பனை செய்யப்படவுள்ளன. அந்தவகையில் 20 இன்சுக்கு 30 இன்ச் அளவுள்ள தேசியக் கொடியின் விலை ரூ. 25-க்கு விற்கப்படும். இதற்கு சிறிய அளவிலான தேசியக் கொடிகள் ரூ. 18 மற்றும் ரூ 9-க்கு விற்பனை செய்யப்படும்.

இதுதவிர மகளிர் சுய உதவிக் குழுக்கள், காதி நிறுவனம், மற்றும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எட்டு சிறு குறு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசிய கொடிகளும் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com