காளி கையில் சிகரெட்: கனடாவில் சர்ச்சை!

காளி கையில் சிகரெட்: கனடாவில் சர்ச்சை!

கனடாவில் வசிக்கும் தமிழரான லீனா மணிமேகலை இயக்கிய ஆவணப் படத்தின் போஸ்டரில்  இந்து மதக் கடவுளான மகா காளி சிகரெட் புகைப்பது போன்று காணப்படுவது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக் கடவுளை அவமதிப்பது போன்ற இந்த காளி ஆவணப்படத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு கனடாவிலுள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

-இதுகுறித்து கனடாவிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

டொராண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட காளி ஆவணப்படத்திலும், அப்படத்தின் போஸ்டரிலும் இந்து கடவுளான காளியை அவமதிக்கும் வகையிலான காட்சி இடம்பெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.எனவே சர்ச்சைக்குரிய அந்த ஆவணப்படம் சம்மந்தப்பட்ட அனைத்தையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாபஸ் பெற வேண்டும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

-இவ்வாறு கனடா நாட்டின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் வசிக்கும் தமிழக இயக்குனர் லீனா மணிமேகலை  இயக்கியுள்ள காளி ஆவணப்படத்தின் போஸ்டரில் இந்துக்களின் கடவுளான மகா காளி சிகரெட் புகைப்பது போன்றும் ஒரு கையில் மாற்றுப் பாலின சமூகத்தின் கொடியை ஏந்தியபடி இருப்பதை போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி மணிமேகலையை கைது செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com