வங்கிக் கடனுக்கு வட்டி அதிகரிப்பு; பொதுமக்கள் அதிர்ச்சி! 

வங்கிக் கடனுக்கு வட்டி அதிகரிப்பு; பொதுமக்கள் அதிர்ச்சி! 

வங்கிகளில் பெறப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் பல்வேறு வகையான தேவைகளுக்கும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி முடிவு செய்து வருகிறது.

இந்நிலையில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்ததாவது;

தற்போது உலகளாவிய சூழலில் பணவீக்கம் விகிதம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் பொருளாதார நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்த்தப் படுகிறது. அதாவது குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4.9% ஆக இருந்த நிலையில் அது 5.4% ஆக உயர்ந்துள்ளது. 

–இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியதால், பொதுமக்கள் வீடு, கார், தொழில் கடன்களுக்கு வங்கியில் வாங்கிய கடன் தொகைக்கு தனிநபருக்கான வட்டி விகிதமும்  உயரக்கூடும் என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com