32 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை சிறையிலிருந்து தாயகம் திரும்பினர்!

32 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை சிறையிலிருந்து தாயகம் திரும்பினர்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 32 பேர் விடுதலை செய்யப்பட்டு இன்று காலையில் விமானம் மூலம் தமிழகம் வந்தனர்.

இதுகுறித்து தமிழக மீனவர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்கள்,ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்கள்,மயிலாடுதுறையை சேர்ந்த 2 மீனவா்கள்,காரைக்காலை சேர்ந்த 4 மீனவர்கள் ஆகியோர் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக்கூறி இலங்கை கடற்படையினர் இந்த 34 பேரையும் கைது செய்து செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

அவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த 34 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதையடுத்து மத்திய அரசு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இலங்கை நீதிமன்றம் 34 தமிழக மீனவர்களையும் சிறையிலிருந்து விடுவித்து, அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இந்த 34 மீனவர்களீல் 2 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டதால் , இலங்கை அரசு மருத்துவமனையில் சோக்கப்பட்டனா்.

மற்ற 32 மீனவர்களும் இலங்கையிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று அதிகாலை 4:20 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தனா். பின்னர் தனித்தனி வாகனங்களில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

-இவ்வாறு தமிழக மீனவர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com