பஸ்சில் பயணிக்க இ-டிக்கெட் விரைவில் அறிமுகம்; அமைச்சர் சிவசங்கர்!

பஸ்சில் பயணிக்க இ-டிக்கெட் விரைவில் அறிமுகம்; அமைச்சர் சிவசங்கர்!

தமிழகத்தில் பேருந்துகளில் பயணிக்க இ-டிக்கெட் முறையில் பயணச் சீட்டுகள் வாங்கும் முறை இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிவித்துள்ளார்.

-இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது:#

தமிழகத்தில் பேருந்துகளில் பயணம் செய்ய இ-டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை ஜிபே உள்ளிட்ட முறைகளில் பணம் செலுத்தும் வசதி விரைவில் அமல்படுத்தப் படும்.  தமிழக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கருதி, நகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் அவரச அழைப்பு பொத்தான் பொருத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சுமார் 500 பேருந்துகளுக்கு இஅவை பொருத்தப் பட்டுள்ளன.

இந்த நிலையில், பேருந்தில் பயணச் சீட்டு வாங்குவதறகு பதிலாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், gpay, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம்.

-இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com