நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை தொடக்கம்!

நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை தொடக்கம்!

இந்திய ரயில்வே துறையின் முதல் தனியார் ரெயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை தொடங்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட தெரிவித்ததாவது:
நாட்டின் முதல் தனியார் ரயில்  சேவை ஜூன் 14 அன்று கோவையிலிருந்து மகாராஷ்டிராவிலுள்ள  ஷீரடிக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில்  கோவையில் மாலை 6 மணிக்கு இந்த ரயில் புறப்படும். திருப்பூருக்கு 7 மணி ஈரோடு 8 மணி, சேலம் 9.15, (15.6.2022) அன்று ஜோலார்பேட்டை இரவு 00.10, எலகங்கா விடியற் காலை 5 மணிக்கும், தர்மாவரம் 6.20, மந்த்ராலயம் ரோடு 11.00 மணிக்கும், மாலை 4.00 மணிக்கு மந்த்ரா ரோட்டிலிருந்து புறப்பட்டு வாடி இரவு 7.15க்கும், சென்று ஜூன் 16-ம் தேதி காலை 7.25க்கு  ஷீரடியை சென்றடையும்.
அதேபோல் 17.6.2022 அன்று காலை 7.25 க்கு ஷீரடியிலிருந்து புறப்பட்டு வாடி ரெயில் நிலையத்திற்கு மாலை 4.30 க்கும், தர்மாவரத்திற்கு இரவு 11.10க்கும், எலங்காவிற்கு 18.6.2022 காலை 2.10க்கும், ஜோலார்பேட்டைக்கு காலை 5.55க்கும், சேலம் 7.30க்கும், ஈரோடு 8.30க்கும், திருப்பூர் 10.25க்கும், கோவைக்கு நண்பகல் 12.00 மணிக்கு வந்து சேரும் .
– இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com