கலர்ஃபுல் பிரபஞ்சம்; நாசா புகைப்படம் வெளியீடு!

கலர்ஃபுல் பிரபஞ்சம்; நாசா புகைப்படம் வெளியீடு!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து ஆராய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நிறுவியிருந்தது. இத்தொலைநோக்கி முதன்முதலாக படம்பிடித்த பிரபஞ்சத்தின் வண்ணப் படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று மாலையில் வெளியிட்டார்

இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

பிரபஞ்சத்தில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒளிக் நட்சத்திரங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்திருக்கிறது. நாசாவில் முதலில் நிறுவப்பட்ட ஹபுள் ஸ்பேஸ் தொலைநோக்கிக்கு அடுத்தகட்டமாக, சென்ற வருடம் சுமார்  10 பில்லியன் டாலர் செலவில் இந்த ஜேம்ஸ் வெப் நிறுவப்பட்டது. இந்த தொலைநோக்கி மூலம் வானில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான நட்சத்திரங்களையும் மனிதர்கள் வாழத்தக்க கிரகங்கள் உண்டா என்பது குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டன. 

அந்த வகையில் சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பிரபஞ்சம் தோன்றியபோது உருவான ஒளிச் சிதறல்களை இந்த தொலைநோக்கி துல்லியமாக படம்பிடித்துள்ளது. இந்தத் தொலைநோக்கி எடுத்த மேலும் பல படங்களை நாசா இன்று வெளியிடவிருக்கிறது.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com