மீன் பிரியர்களுக்கு ஜாலி; இன்றுடன் தடை ஓவர்!

மீன் பிரியர்களுக்கு ஜாலி; இன்றுடன் தடை ஓவர்!

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில் கடலுக்குச் செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

தமிழகக் கடலோரங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த 15-ம் தேதி முதல் அமல்படுத்தப் பட்ட மீன்பிடி தடைக்காலம் இன்று இரவுடன் முடிவடையும் நிலையில், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நாளை முதல்  மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத்தினர் தெரிவித்ததாவது;

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் காரணமாக கரைக்கு அருகே பிடிக்கப்பட்ட மீன், இறால், நண்டு உள்ளிட்டவை மட்டுமே விற்பனை செய்தோம். இன்றுடன் தடைக்காலம் நிறைவடைவதால், இனி கடலில் மீன் பிடிக்க செல்வோம். ஆனால் கடலுக்குச் சென்று தாங்கள் பிடித்துவரும் மீன்களை, சிண்டிகேட் ஏற்றுமதியாளர்கள் குறிந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, மீனவர்களுக்கு தகுந்த விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் நாங்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது, இலங்கை கடற்படையால் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இவ்வாறு அந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com