அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பல மாநிலங்களில் போராட்டம்!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பல மாநிலங்களில் போராட்டம்!

இந்திய ராணுவத்தின் செலவுகளைக் குறிக்கும் வகையில் அக்னி பாத் என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்களில் 80% பேர் 4 ஆண்டுகள் மட்டும் ஒப்பந்த அடிப்படியில் நியமிக்கப்பட்டு, பணிக்கால  10 லட்சம் ரூபாய் ஊதியம் அளிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 20 % பேர் தகுதியின் அடிப்படையில் ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு அமர்த்தப் படுவார்கள் எனத் தெரிவிக்கப் பட்டது. 

மத்திய அரசின் இந்த புதிய அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலுங்கான உள்ளிட்ட  பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக பிஹார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. ரயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.தெலங்கானா ரயில் நிலையத்தில் போர்ராட்டக் காரர்கல் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்..

பீஹாரில் துணை முதல்வர் ரேணு தேவியின் வீடு தாக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று காலை மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஹரியாணா மாநிலத்தில் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறக்கப்பக்கப்பட்டுள்ளது. ஹரியாணாவின் குருகிராம் நகரம் டெல்லி, ஹரியாணா எல்லையில் உள்ளது. இங்கு தொழில்பேட்டைகள் நிறைய உள்ளன. அங்கு ஏதேனும் அசம்பாவதிம் ஏற்பட்டால் நிலைமை மோசமாகலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அக்னி பாத் திட்டத்துக்கு முதன்முதலில் தனது எதிரிப்பைப் பதிவு செய்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மீண்டும் ட்விட்டரில் மத்திய அரசை சாடியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:

மத்திய அரசால் யாரையும் திருப்திப்படுத்த முடியவில்லை. அக்னி பாதை திட்டத்தை மாணவர்கள் ஏற்கவில்லை, வேளாண் சட்டங்களை விவசாயிகள் ஏற்கவில்லை, ஜிஎஸ்டியை வியாபாரிகள் ஏற்கவில்லை, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பொருளாதார நிபுணர்கள் ஏற்கவில்லை.

-இவ்வாறு ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com