விண்ணில் ஒலித்த பயங்கர சத்தம்; திருப்பூர் மக்கள் கடும் பீதி!

விண்ணில் ஒலித்த பயங்கர சத்தம்; திருப்பூர் மக்கள் கடும் பீதி!

திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளக்கோவில், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென விண்ணிலிருந்து  பயங்கர சத்தம் ஏற்பட பொதுமக்கள் பீதியடைந்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இன்று தெரிவித்ததாவது:

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை ஓடு தளத்தில் இருந்து கிளம்பும் ராணுவ விமானங்கள் பயிற்சியின்போது திருப்பூர் மாவட்டத்தின் வான் பரப்பில் உச்சகட்ட வேகத்தில் செல்வது வழக்கம். சோனிக் பூம் எனப்படும் முறையை கையாண்டு ஒளியின் வேகத்துக்கு இணையாக பயணிக்க எரிபொருளை வெளியிட்டு எரிக்கும்போது கிடைக்கும் அதிக அழுத்தம் காரணமாக உச்சபட்ச வேகத்துடன் போர் விமானம் முன்னோக்கி பாயும்.

அப்படி எரிபொருள் மொத்தமாக எரியும்போது வானில் இப்படி பயங்கர வெடி சத்தம் எழுவது சகஜம். இச்சத்தம் பல கிலோ மீட்டரர் தொலைவு வரை கேட்கும். மேலும் லேசான அதிர்வுகளும் ஏற்படும். நேற்று கேட்டதும் அதேபோன்ற சத்தம்தான் என்பதால், மக்கள் பீதியடைய தேவையில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த சத்தம் காரணமாக விபத்து எதுவும் நிகழவில்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com