3-ம் உலக போர் தொடங்கக் கூடும்; ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

3-ம் உலக போர் தொடங்கக் கூடும்; ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், விரைவில் 3-ம் உலகப் போர் தொடங்க கூடும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யா தனது தாக்குதலை உக்ரைனின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில்,ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அந்நாட்டு செய்தியாளர்கலிடம் கூறியதாவது:

உக்ரைன் நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி ரஷ்யா சுமுகமாகவே செல்ல முயற்சிக்கிறது. ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்துவது போலப் பாசாங்கு செய்கிறார். அவர் பேச்சில் ஆயிரம் முரண்பாடுகள் உள்ளன. உக்ரைனுக்கு ஆதரமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதி நவீன ஆயுதங்களை வழ்ங்கினால், விரைவில் இதுவே 3-ம் உலகப் போரின் தொடக்கமாக மாறக்கூடும்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய அமைச்சரின் இந்தப் பேச்சு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com