மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு;  ஜூம்மா மசூதி அருகே நடமாட தடை!

மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு;  ஜூம்மா மசூதி அருகே நடமாட தடை!

கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள மலாலியில் பழமையான‌ ஜும்மா மசூதி உள்ளது. இங்கு, சமீபத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டபோது இந்து கோவில் போன்ற கட்டிடத்தின் வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கோயிலை மீட்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அந்த மசூதிக்கு அருகில் உள்ள ராமாஞ்சநேயா பஜனை மந்திராவில் நேற்று முன்தினம் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 'தாம்பூல பூஜை' நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் இந்து, முஸ்லிம் தரப்பினரிடையே பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ஜூம்மா மசூதியைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மக்கள் நடமாட இன்று இரவு 12 மணி வரை தடைவிதித்து 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் மங்களூரு மாநகர காவல் ஆணையர் சசிகுமார். மேலும்அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட மசூதி  நிலம் தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்த பிறகே இதுகுறித்து முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் தக்ஷின கன்னட மாவட்ட ஆட்சியர் கே.வி.ராஜேந்திரா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com