மாநகராட்சி பள்ளி சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ்! தலைமை ஆசிரியருக்கு குவியும் பாராட்டு!

மாநகராட்சி பள்ளி சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ்! தலைமை ஆசிரியருக்கு குவியும் பாராட்டு!
  1. தமிழகத்தில் முதன்முறையாக ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி சமையற் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. இதற்கு பெருமுயற்சி எடுத்த அப்பள்ளியில் தலைமையாசிரியர் மாலாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சுகாதாரமற்று இருந்த சமையற்கூடத்தை சுத்தப் படுத்தும் முயற்சியில் இறங்கினார், மாலா, சமையலறை சுத்தப் படுத்தப்பட்டு, டைல்ஸ் ஒட்டப்பட்டு, புதிய வர்ணம் பூசி மாற்றப்பட்டது.மேலும் சமையலுக்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண் பாத்திரங்கள்மாணவர்களின் பெற்றோர்கள் உதவியுடன் புதிதாக வாங்கப்பட்டது. மேலும் சமையலுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்தும்படி தலைமை ஆசிரியர் மாலா உத்தரவிட்டார்.இப்படி பல சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். சமையற் கூடத்தின் செயல்பாடுகளை கவனிக்க தனியாக ஆசிரியர் குழு, மற்றும் சி.சி.டி.வி கேமரா ஆகியவையும் அமைக்கப்பட்டது.

இதையடுத்து, ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி சமையற் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று கிடைத்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com