மேத்தி பரோட்டா

மேத்தி பரோட்டா

வாணி கணபதி, பள்ளிக்கரணை.

தேவையானவை:

வெந்தயக்கீரை 1கப்

கோதுமை மாவு 2கப்

தயிர் 1/4 கப்

மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்

வெண்ணெய் 1/2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் தேவையான அளவு

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

வெந்தயக்கீரை யின் இலைகள் மட்டுமே எடுத்து நன்கு கழுவி பொடியாக நறுக்கவும்.அதனுடன் கோதுமை மாவு, மிளகாய்த்தூள்.மஞ்சள் தூள்.தயிர் வெண்ணெய்.உப்பு சேர்த்து பிசைந்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.கீரை தண்ணீர் விடும் தன்மை உடையது.அதனால் கவனமாக பிசைந்து வைக்கவும்.. பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து சப்பாத்தியாக இட்டு சுற்றிலும் மடித்து மறுபடியும் சற்று கனமாக இட்டு தோசை கல்லில் போட்டு பதமாக போட்டு எடுக்கவும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com