மூலிகை கீரை கடையல்

மூலிகை கீரை கடையல்

ஷெண்பகம் பாண்டியன். சத்துவாச்சாரி

தேவை:
சிறுகீரை,முருங்கை கீரை,முடக்கத்தான் கீரை,அரைக்கீரை ,மூக்கிரட்டைக்கீரை,பருப்புக்கீரை,மணத்தக்காளிக்கீரை,குப்பைக்கீரை,பொன்னாங்கன்னிக்கீரை,கரிசிலாங்கன்னிக்கீரை என எல்லாம்கலந்தக்கீரை – 1 கட்டு.
பூண்டு -10 ற்கள்,பெரிய வெங்காயம்-1.
தக்காளி – 2புளிசிறிது,பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் தலா 2.
செய்முறை:
கீரை வகைகள் உடபட எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து வேகவைக்கவும். தேவையான அளவு கல்உப்பு சேர்த்து கீரை ஒன்றிரண்டாக கடைந்துக்கொள்ளலாம்.அல்லது மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளலாம். பின்னர் கீரையை கெட்டியாக கடைந்து,சீரகம்,கடுகு பெருங்காயம் ,கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். சுடுசாதத்தில் நெய்,கீரைக்கடையல் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com