பிரபல நடிகர் கானா பாலா: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டி!

பிரபல நடிகர் கானா பாலா:  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டி!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 12,820 பதவிகளுக்கான  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6-ஆவது மண்டலம், 72-ஆவது வார்டில் சுயேட்சையாக போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து கானா பாலா கூறியதாவது;

நான் ஏற்கனவே கடந்த 2006 மற்றும் 2011 தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்திருந்த நிலையில், தற்போது 3-வது முறையாக அதே வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த பிரபல கானா பாடகரான பாலா, தமிழ் சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com