உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெள்ளி வென்று சாதனை!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெள்ளி வென்று சாதனை!

ஸ்பெயின் நாட்டின் ஹூயெல்வா நகரில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவுப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி வென்றார். இதன்மூலம் இப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வீரரான ஸ்ரீகாந்த் கிடாம்பி, 45 நிமிடங்கள் நடந்த இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூவை எதிர்கொண்டு, கடுமையாகப் போராடினார ஆரம்பம் முதலே லோ கியான் வூ ஆதிக்கம் செலுத்தியதால், முதல் செட் ஆட்டம் ஶ்ரீகாந்துக்கு மிகவும் சவாலானதாக அமைந்தது. இரண்டாவது சுற்றில் கடுமையாகப் போராடி தோற்றார். அந்தவகையில் ஶ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைபெற்ற ஶ்ரீகாந்துக்கு பார்ரட்டுகள் குவிகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com