உளுந்து உப்புமா

உளுந்து உப்புமா

வி.கலைமதிசிவகுரு, நாகர்கோவில்.

தேவை:
உளுந்து _ 300கிராம்
தேங்காய் எண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு 1/4 டீஸ்பூன்
மிளகாய் _5
கறிவேப்பிலை_சிறிது
கடலைப்பருப்பு_1டீஸ்பூன்
பல்லாரி வெங்காயம் _2
உப்பு _தேவைக்கு

செய்முறை:
உளுந்தை சுமார் 2 மணி நேரம் ஊற வைத்து களைந்து எடுத்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்து வடைக்கு அரைப்பது போல் சிறிது நீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பை போட்டு கடுகு வெடித்ததும் பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கிய உடன் உளுந்து மாவை போட்டு அடி பிடிக்காமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.பிறகு ஆவி வெளியே போகாமல் மூடி போட்டு தீயை குறைத்து வைத்து வேகவைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி விட்டு சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாற சுவை யாக இருக்கும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com