online@kalkiweekly.com

spot_img

எதுவும் என்னை உடைக்க முடியாது

வினோத்

ல்லூரி காலங்களில் படிப்பில் டாப்பர். 15 வயதிலிருந்தே மாடலிங் துறையில் சேர்ந்து உழைப்பு. தெலுங்கு, தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற கதாநாயகிகளில் ஒருவர். 4 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 2 நந்தி விருதுகள்,           6 சர்வதேச திரைப்பட விருதுகள். ஓடிடி தளத்திலும் ஜொலிப்பு. பிரபல இணையவழி ஆடை பிராண்டின் நிறுவனர், பல தனியார் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பெண்கள் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் சேவை. இப்படி பன்முகப் பிரபலமாக திகழ்பவர் நடிகை சமந்தா. 34 வயதுக்குள்ளாக இவை அனைத்தையும் அடைந்தவர் அவர்.

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன்
நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு காதல் மணம் செய்து கொண்டார் சமந்தா. பல்வேறு கனவுகளோடு மணவாழ்க்கையை தொடங்கிய இருவரும் சில நாட்களுக்கு முன்பு தங்கள் விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர்

இந்த  மணமுறிவு தெலுங்குப் பட உலகில் மட்டுமின்றி அகில இந்திய அளவில் பேசப்பட்ட பேசு பொருலாகியிருந்த்து. ஊடகங்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் பெரிதும் விமர்சிக்கபட்டது. பெரும்பாலான விமர்சன்ங்கள் சமந்தா குறித்து தான்.  நாக சைதன்யாவை குறை சொன்னவர்கள் மிகச்சிலரே.

பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகமாக ஆராய்வதும் பேசுவதும் நம் சமூகத்திற்கு புதிதல்ல என்றாலும் சமந்தா விஷயத்தில் அவர் எதிர்கொண்டுவரும் உளவியல் ரீதியான தாக்குதல்கள் ஏராளம்…

விவாகரத்து என்பது ஒரு தம்பதிக்குள்ளான தனிப்பட்ட விஷயம் என்றாலும் வார்த்தை தாக்குதல்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாவது என்னவோ பெண்கள் மட்டும்தான் என்பது சமந்தாவின் விஷயத்திலும் நிதர்சனமாகியுள்ளது. புகழ்பெற்ற பெரும் குடும்பத்தில் மருமகள் ஆகிவிட்ட காரணத்தினால் தனது திறமையையோ, கனவுகளையோ, தனித்துவத்தையோ, லட்சியங்களையோ, துறக்கவேண்டிய அவசியம் ஒரு பெண்ணுக்கு உள்ளதா? அப்படி தனது சொந்த விவகாரங்களில் தானே முடிவெடுக்கும் பெண்கள் சமூகவலைதளதளத்தில் விமர்சிக்கப்படுவது ஏன் என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. இன்னும் நமது சமூகம் பெண்களின் வளர்ச்சியையும் சுதந்திர மனோபாவத்தையும் மதிக்கவில்லை என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

விவாகரத்துக்கு சமந்தா கேட்ட ஜீவனாம்சத் தொகை 200 கோடி என்றும் அதை நாக சைதன்யா  தர ஒப்புக்கொண்டுவிட்டடதாகவும் உலவிய செய்தியால் பெரிதும் பாதிக்கபட்ட சமந்தா  தன் ட்வீடரில்,

”என்னுடையத் தனிப்பட்ட பிரச்னை மீது நீங்கள் அனைவரும் காட்டிய அக்கறை என்னை நெகிழ செய்தது. என் மீது காட்டிய கருணைக்கு நன்றி. அதேபோல, இந்த விவாகரத்து அறிவிப்புக்கு பின்னால் என்னை சுற்றி நிறைய வதந்திகளும் வலம் வருகின்றன. நான் பிறருடன் தவறான உறவில் இருக்கிறேன், குழந்தை வேண்டாம் என மறுத்தேன், சந்தர்ப்பவாதியாக இருந்தேன், கருக்கலைப்பு செய்திருக்கிறேன் என இப்படி ஏராளமான வதந்திகள் வந்துக்கொண்டே இருந்தன. இப்படி  வதந்திகளைப் பரப்புவது இரக்கமற்றது என வேதனையுடன் கூறியிருக்கிறார் சமந்தா. இந்த வார்த்தைகளெல்லாம் என்னை துவண்டுவிடச்செய்ய நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்!”

மணவிலக்கு என்பது உண்மையில் மனதளவில் பாதிக்கக்கூடிய ஒரு விஷயம். இந்த வலியில் இருந்து நான் மீள்வதற்கு சிறிது காலம் ஆகும். மேலே சொன்னபடி, தனிப்பட்ட முறையில் என் மீதான தவறான வதந்திகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால், நான் ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன், இப்போது என் வாழ்க்கையில் நடந்த விஷயமோ அல்லது வேறு எதுவோ என்னை உடைக்க முடியாது,” என்று அவர் தன் இன்ஸ்டாகிராமில் சொல்லியிருப்பது அவரது துணிவையும் தன்னம்பிக்கையையும்  காட்டுகிறது

தனது சொந்த விவகாரங்களில் தானே முடிவெடுக்கும் பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் அது அவர்கள் உரிமை என்பதும்  நமது சமூகத்தின்  எல்லா அடுக்களில் இருப்பவர்களால் உணரப்பட வேண்டும்.

1 COMMENT

  1. சபாஷ் சமந்தா சபாஷ்! நிமிர்ந்து நில்லுங்கள் பாரதி விழைந்த புதுமைப் பெண்ணாக! அடிமை தளைகளை ஒடித்து எறியுங்கள் பெரியாரின் எண்ணியபடியே!

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

செல்சாரைத் தேடிய ரா.கி.ரா

1
சுஜாதா தேசிகன்                                             ...

உங்கள் குரல்

1
தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்துள்ள  தமிழக அரசை பாராட்டி, ’அந்தப் பணியை செம்மையாக நிறைவேற்றிய செவிலியர்கள்/மருத்துவர்கள் கடவுளின் தூதர்களாகப் பார்க்கப்படுவார்கள். அவர்களை மனதார பாராட்டி நன்றி சொல்லி பெருமிதம் கொள்வோம்’  என்ற கல்கியின்...

விமானத்தின் வேகத்தில் ரயில் பயணம் !

0
இஸ்ரோ விஞ்ஞானி சசிக்குமார் சந்திப்பு:  ராசி பாஸ்கர் “சக்கரத்திற்கும் சாலைக்கும் உள்ள உராய்வும், காற்றினால் ஏற்படும் உராய்வும், நாம் வேகமாகச் செல்வதற்குத் தடையாக இருப்பதோடு அதிக ஆற்றல் செலவினத்தை உருவாக்குகிறது. இந்த இடையூறுகளிலிருந்து விடுபட்டு வேகமாகப்...

போராடி அலையும் யானைகளின் கதை

0
சரஸ்வதி காயத்திரி (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு) வலசை அச்சுக்கு வருவதற்கு முன்பே விருது பெற்றிருக்கும் சு.வேணுகோபாலின் இரண்டாவது நாவல் என்ற சிறப்பும் இதற்கு உண்டு ஒரு விவசாயியாக , இந்த நிஜ உலகைப்...

காதலுக்கு மரியாதை

0
ஹர்ஷா தன் காதலுக்காக நாட்டின்  மன்னராகும் வாய்ப்பை தியாகம் செய்து முடி துறந்து சரித்திரத்தில் இடம் பெற்ற இளவரசர்களை நாம் அறிவோம். கடந்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து அரச குடும்பத்தில் கூட நிகழ்ந்திருக்கிறது,  பிரிட்டனின்...
spot_img

To Advertise Contact :