என்னங்க சார் உங்க சட்டம்: பட விமர்சனம்!

என்னங்க சார் உங்க சட்டம்:  பட விமர்சனம்!

– ராகவ்குமார்.

இன்று பலதரப்பட்ட சர்ச்சைக்குரியதான சமகால சென்சிடிவ் விஷயங்களை கேள்விக்கு உட்படுத்தி சினிமாவாக தந்திருக்கிறார் டைரக்டர் ஜெயராம் பிரபு.

சினிமாவில் ஹீரோ வாய்ப்பு தேடும் கார்த்திக் ஆர் எஸ், சினிமா டைரக்டர் ஆக என்ற ஆசையில் சில கதைகளை தயாரிப்பாளரிடம் சொல்ல, அவர் அதில் ஈடுபாடு காட்டவில்லை. ஆனால், கார்த்திக்கின் அதே கதையை வேறொருவர் திருடி அந்ந்த தாயாரிப்பளரிடம் கதை சொல்லப்பட, இந்த விஷயம் கார்த்திக்குக்கு தெரிய வருகிறது. உடனே கார்த்திக் தன் கதையில் சில மாற்றங்கள், திருப்பங்களுடன் ''என்னங்க சார் உங்க சட்டம்?"" என்ற பெயரில் சொல்கிறார். கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைத்ததா கார்த்திக் சொன்ன உண்மை கதை என்ன என்பதுதான் சினிமா.

தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அர்ச்சகர் ஆகும் எண்ணத்துடன் நேர்காணலில் கலந்து கொள்ள வருகிறார். இதே நேர்காணலில் உயர் ஜாதியில் பிறந்த ஒரு இளைஞன் சொந்த சமூக மக்களாலே ஒதுக்கப்படும் சவண்டி பணியை செய்பவன் – கலந்துகொள்ள வருகிறார். இருவரில் யாருக்கு வேலை கிடைத்தது என்பதுதன கதை! அறிவு தளத்தில் சொல்ல வேண்டிய விஷயங்களை செண்டிமெண்ட் தளத்தில் கட்டமைத்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com