யார் அடுத்த வார கேப்டன்.. போட்டி போடும் மாயா, கூல் சுரேஷ்.. வெளியானது புரோமோ!

Bigg Boss Cool Suresh
Bigg Boss Cool Suresh

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்7 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். விதிப்படி பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் கடந்த ஆறு சீசன்களுமே மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே இந்நிகழ்ச்சி உருவாக்கிக்கொண்டது.

இதையடுத்து பிக்பாஸ் 7 எப்போது வரும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அதைவிட யார் போட்டியாளர்களாக இருப்பார்கள் என பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது.

இதையடுத்து அக்டோபர் 1ம் தேதி பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியது. இந்த சீசனில் புது விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதாவது பிக்பாஸ் வீடு ஸ்மால் பாஸ் வீடு என இரு வீடுகளாகப் பிரித்தனர். பிக்பாஸ் வீட்டில் சரியாக விளையாடாத ஆறு போட்டியாளர்களை கேப்டனால் தேர்ந்தெடுத்து ஸ்மால்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வீட்டின் அனைத்து வேலைகளையுமே செய்ய வேண்டும். மேலும் எந்த போட்டிகளிலுமே விளையாடக் கூடாது. பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்பது விதிமுறை.

ஏற்கனவே 5 பேர் வீட்டை விட்டு சென்ற நிலையில், வைல்டு கார்ட் எண்ட்ரியாக 5 பேர் வீட்டிற்குள் வந்துள்ளனர். ஏற்கனவே அனைத்தையும் வெளியில் இருந்து பார்த்து வந்த 5 பேரும் விளையாட்டை அசால்டாக விளையாடி வருகின்றனர். ஆனால், அர்ச்சனா தொடர் வாக்குவாதத்தால் அடிக்கடி கண்கலங்கி வருகிறார்.

தொடர்ச்சியாக வெளிவந்த இன்றைய புரோமோவில் அடுத்த வார கேப்டன்சி தேர்வு நடைபெறுகிறது. அதில், விசித்ரா, கூல்சுரேஷ், மாயா போட்டியிடுகிறார். அசையால் ஒற்றை காலில் நிற்க வேண்டும் என்ற டாஸ்கில் விசித்ரா தடுமாறிவிட்டார்.

தொடர்ந்து கூல் சுரேஷும், மாயாவும் எதிரெதிரே போட்டிபோடுகின்றனர். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே வரும் வார கேப்டன் ஆவார். யார் என்பதை இன்றைய எபிசோட்டில் பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com