டாஸ்கில் தோற்றால் பெட்ரூமில் இடமில்லை.. அதிரடியான பிக்பாஸ் 7 புரோமோ!

பிக்பாஸ் 7 புரோமோ
பிக்பாஸ் 7 புரோமோ

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்7 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். விதிப்படி பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் கடந்த ஆறு சீசன்களுமே மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே இந்நிகழ்ச்சி உருவாக்கிக்கொண்டது.

இதையடுத்து பிக்பாஸ் 7 தொடங்கப்பட்டு அட்டகாசமாக ஓடி கொண்டிருக்கிறது. புது விதமாக இந்த சீசனில் மட்டும் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என்ற கான்சப்ட்டை கொண்டு வந்தனர். அதாவது கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு பிடிக்காதவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். அவர்களே பிக்பாஸ் வீட்டாருக்கு அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பார்கள்.

இப்படி சுவாரஸ்யமாக நகர்ந்து கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 7ல் கடந்த வாரம் மிகப்பெரிய புரட்சி நடந்தது என்றே சொல்லலாம். அதாவது பெண் சுதந்திரம் என்ற பெயரில், அனைவராலும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். இதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்து கருத்து பதிவிட, அனைவரின் வாயை அடைக்கும் விதமாக சனிக்கிழமை கமல்ஹாசன் அதிரடி காட்டியுள்ளார். அனைவரின் கேள்விகளுக்கும் விளக்கம் கொடுத்து அடுத்தடுத்து குறும்படங்களை போட்டு மிரட்டினார். இதனால் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கதிகலங்கியுள்ளனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் ஐஷு வெளியேறினார்.

தொடர்ந்து வெளியான இன்றைய புரோமோவில், ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது. அந்த டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்றால் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் படுக்கை அறை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த டாஸ்கில் முதலாவதாக நிக்ஸன் தோற்க அடுத்ததாக பூர்ணிமா தோற்றதால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் படுக்கை அறை மூடப்படுவது அந்த வீடியோவில் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com