
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே யார் வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஸ்மால் பாஸ் வீடு, பிக்பாஸ் வீடு என 2 வீடுகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ்கள் அட்டகாசமாக விளையாடி வருகின்றனர். இதில் மேலும் ஒன்று இல்லாமல் ஐந்து பேரை வைல்டு கார்டு போட்டியாளராக இறக்கினார்கள். இவர்களில் 2 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர். தற்போது பிக்பாஸில் மொத்தம் 14 போட்டியாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் 7வது சீசனில் புதுவிததாமக மீண்டும் ஒரு வைல்டு கார்டு எண்ட்ரி நடைபெறபோகிறது. என்னடா இது புது ட்விஸ்ட் என்று அனைவரும் ஷாக் ஆகு,ம் அளவிற்கு அடுத்தடுத்து பல சுவாரஸ்யங்கள் இந்த பிக்பாஸில் நிகழ்ந்து வருகிறது. அதாவது வைல்ட் கார்ட் எண்ட்ரி என்றாலே புதிதாக வருபவர்கள் தானே. ஆனால், இந்த சீசனில் ஏற்கனவே எவிக்ஷன் செய்யப்பட்டு அனுப்பட்டு இருக்கும் போட்டியாளர்களில் இருந்து மூன்று பேர் வர இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று 50வது நாள் வெளியான புரோமோக்கள் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. அதில், இந்த வாரம் புதிதாக மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியில் வீட்டிற்குள் வரவுள்ளனர். ஏற்கனவே வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு மூன்று கடுமையான போட்டியை வைக்க போகிறாராம் பிக் பாஸ். இதில் வெற்றிபெற்றால், மூன்று புதிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியில் வரமாட்டார்கள்.
ஆனால், ஒரு வேளை வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் இந்த கடுமையான போட்டியில் தோற்றுவிட்டால், புதிதாக மூன்று வைல்டு கார்டு நபர்கள் என்ட்ரி கொடுப்பார்கள் என்றும், அவர்கள் ஏற்கனவே இங்கிருந்து சென்ற பழைய ஹவுஸ்மேட்ஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட அனைவரும் ஷாக்கில் உறைந்துள்ளனர்.
இந்த வீடியோக்களை பார்த்த ரசிகர்கள், ஐஷு, பிரதீப் உள்ளிட்டோர் வரப்போகிறார்களா என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால், ஐஷு தனது வலைதள பக்கத்தில் மிகவும் வருத்தமாக பதிவிட்டிருந்தார். பிரதீப்போ நீங்களாச்சு பிக்பாஸ் ஆச்சு என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இவர்கள் வருவார்களா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் இவர்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.