இந்தியன் 3ம் பாகம்: ஷங்கரின் அடுத்த பிளான்!

இந்தியன் 3
இந்தியன் 3

ந்தியன் 3ம் பாகத்தை எடுக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாக இந்தியன் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

மிக சொற்ப படங்களே இயக்கியிருந்தாலும் தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் ஷங்கர். சில படங்கள் என்றாலும் ஒவ்வொன்றும் சிறப்பான படங்கள் என்று பாராட்ட பெற்றவை. மேலும் இவரின் படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கியதாகவும், பிரம்மிக்க வைக்கும் காட்சிகளை கொண்டவையாகவும் இருக்கும். மிகப்பெரிய பொருட்செலவில் படங்களை இயக்கத் தொடங்கிய தமிழின் முதல் எலக்ட் இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி கமல் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அன்றைய காலகட்டத்தில் 30 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தை ரத்தினம் தயாரித்திருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். மேலும் மனிஷா கொய்ராலா, நாசர், சுகன்யா, கவுண்டமணி, செந்தில், மனோரமா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். தற்போது வரை இந்த படம் தமிழ்நாட்டில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்தார். அதற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கமலுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் கமல் மீண்டும் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இந்தியன் இரண்டாம் பாகத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மா, ரத்னவேலி ஒளிப்பதிவு செய்கின்றனர். மேலும் படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரதீப் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய வேலையில் இந்தியன் மூன்றாம் பாகத்திற்கான வேலையை இயக்குனர் ஷங்கர் தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் பாகத்தின் போதே மூன்றாம் பகத்திற்கு தேவையான கூடுதலான காட்சிகளையும் ஷங்கர் எடுத்து வைத்திருப்பதால் மூன்றாம் பாகத்தை மிக குறுகிய நாளில் முடித்து விட திட்டமிட்டு இருக்கிறார் என்று இந்தியன் படக்குழுவினர் முணுமுணுக்கின்றனர். இந்தியன் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளியாக உள்ள நிலையில் அதற்கு பிறகு 2025 ஆம் ஆண்டு மூன்றாம் பாகத்தை வெளியிடும் வகையில் அதற்கான பணிகளை இந்தியன் இரண்டாம் பாகம் வெளியீட்டிற்கு பிறகு தொடங்கப்படலாம் என்று பேசப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com