
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள ’காதல் தி கோர்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியும் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஜோதிகாவும் இணைந்து நடித்த படம் ’காதல் தி கோர்’ இதை ஜியோ பேபி இயக்கி உள்ளார். இப்படத்தை மம்மூட்டி கம்பெனி தயாரித்துள்ளது.
கேரளாவில் பல்வேறு பகுதிகளில் திரைப்படத்தின் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதல் படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்த நிலையில் படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் நவம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.
இந்த நிலையில் காதல் தி கோர் திரைப்படம் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும், படத்தினுடைய உள்ளடக்கம் ஓரினச்சேர்க்கை காண ஆதரவு கருத்துக்களை கொண்டிருப்பதாகவும் தெரிவித்து படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் கசிந்த நிலையில் தற்போது படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே நேரம் படத்தை வெளியிட வேண்டும் என்று ஆதரவான குரல்களும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் காதல் தி கோர் திரைப்படத்தின் சர்ச்சை வரும் நாட்களில் முக்கிய பேசுபொருளாக மாறும் என்று கேரள திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.