கவளி முத்திரை செய்வது எப்படி :


Posted by-Kalki Teamவலிப்பு நோய் இருப்பவர்கள் இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.

செய்முறை :

முதலில் விரிப்பில் அமர்ந்து கொள்ளவும். பின்னர் படத்தில் காட்டியுள்ளபடி பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் இடையில் உள்ள மேடான பகுதியில், மற்ற கையின் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரலைப் பயன்படுத்தி அழுத்திப் பிடிக்கவும்.

இந்த முத்திரையை எந்த இடத்தில் இருந்து வேண்டுமென்றாலும் செய்யலாம். காலை நேரத்தில் இந்த முத்திரையை செய்து வந்தால் மிகவும் நல்லது. தினமும் 15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

பயன்கள் :

இந்த முத்திரையை தினமும் செய்து வந்தால் வலிப்பு நோயிலிருந்து விடுபடலாம்.


Post Comment

Post Comment