ராகு தோஷம் விலக எளிய பரிகாரங்கள் :


Posted by-Kalki Teamராகு - கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய பரிகார வழிமுறைகளை பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

1. காளாஸ்திரி சென்று ராகு காலத்தில் பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்து வந்தால் சர்ப்ப தோஷம் விலகும்.

2. கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும் தோஷ நிவர்த்தி பெறலாம்.

3. ராகு காலங்களில் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யலாம்.

4. அம்மன், துர்க்கை, சரபேஸ்வரர் இவர்களுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் தோஷம் விலகும்.

5. ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும்.

6. காஞ்சீபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வந்தால் கேது தோஷம் விலகும்.

7. தினசரி விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் தோஷம் விலகும். சங்கடஹர சதுர்த்தி அன்று அருகம்புல் மாலை விநாயகருக்கு சாத்தி வழிபட்டு வந்தால் தோஷம் அகலும்.

8. ராகு தோஷம் உடையவர்கள் தூங்கும்போது தலையணைக்கடியில் அருகம்புல் வைத்தும், கேது தோஷம் உடையவர்கள் தர்ப்பைப் புல்லையும் தலையணைக்கடியில் வைத்துப் படுத்து உறங்கினால் தோஷங்கள் அகலும். 9 வாரம் செய்யவும். அதன்பிறகு அந்த புல்லை கடலில் விட்டு விடவும்.

9. வீட்டில் விளக்கேற்றி ராகு, கேதுவின் காயத்ரி மந்திரங்களை சொல்லி வந்தால் தோஷங்கள் விலகும்.


Post Comment

Post Comment