மாணவர்களுடன் இணைந்து ஆளில்லா ஹெலிகாப்டரை இயக்கிய அஜித்- வைரலாகும் வீடியோ!


Posted by-Kalki Teamசென்னை: நடிகர் அஜித் ஆளில்லா ஹெலிகாப்டரை மாணவர்களுடன் இணைந்து இயக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் புகைப்படங்கள் எடுத்தல், பைக் ரேஸ், ஆளில்லா விமானங்களை வைத்து சாகசம் செய்தல் என அதீத ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (எம்ஐடி) ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர் குழுவிற்கு ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார். எம்ஐடி மாணவர்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதுமுள்ள 111 பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குள் ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடும் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு குழுக்களுடன் எம்.ஐ.டி. மாணவர்கள் குழுவும் பங்கேற்றது.

உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டது

அதில், எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த தக்‌ஷா என்ற ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடப்பட்டது. அது, தரையில் இருந்து 10 முதல் 15 அடி உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டது.

அஜித் யோசனை

மேலும் 6 மணி நேரம் 7 நிமிடம் 45 விநாடிகள் வரை பறந்தது. இந்த ஆளில்லா விமானம் 10 கிலோ வரையிலான எடையை சுமக்கும் என்பதால் இதை ஏர் ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தலாம் என அஜித் யோசனை கூறியுள்ளார்.

ஆரவாரம்

இந்த சாதனையைத் தொடர்ந்து தக்‌ஷா குழுவுக்குத் தமிழக அரசு உயரிய விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் தக்‌ஷா குழுவோடு அஜித் ஆளில்லா விமானத்தை பறக்கவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் தல ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் உள்ளனர்.

கடும் போட்டி

இதில் அஜித் ஆலோசகராக இருந்த தக்‌ஷா குழு இரண்டாவதாக இடம்பிடித்தது. இதில் போட்டி என்னவென்றால் ரத்தமாதிரியை 30 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தப் போட்டியில் தக்‌ஷா குழு வடிவமைத்திருந்த விமானத்திற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஹ் யூஏஎஸ் என்ற ஆளில்லா விமானத்திற்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது.Post Comment

Post Comment