பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள டிப்ஸ் :


Posted by-Kalki Teamபிரசவத்திற்கு பின் பல பெண்களின் குமுறல் தன் உடலை பழையபடி மீட்க முடியுமா என்பதுதான். அது அவ்வளவு கடினமான காரியமில்லை. இந்தக் குறிப்புகளை பின்பற்றுங்கள் போதும்.

பிரசவத்திற்கு பின் பல பெண்களின் குமுறல் தன் உடலை பழையபடி மீட்க முடியுமா என்பதுதான். அது அவ்வளவு கடினமான காரியமில்லை. இந்தக் குறிப்புகளை பின்பற்றுங்கள் போதும்.

* சரியான உணவு உட்கொள்ளாவிடில் குழந்தைக்கான பால் சுரத்தல் நின்றுவிடும். பின் குழந்தையும் பசியில் இருக்கும். குழந்தைகான பால் பாதிக்காதவாறு உங்கள் டயட்டைப் பின்பற்றுங்கள். ஒரு நாளைக்கு 2000 கலோரிகளுக்குக் குறைவாக உணவு எடுத்துக் கொள்ளாதீர்கள். பசித்தால் பழங்கள், சாலட், கோதுமை ரொட்டி, தயிர், தானிய வகைகள் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.

* பால் கொடுப்பதிலும் உடல் எடைக் குறையும் என்பதை பல ஆராய்ச்சிகளிலும் இதை நிரூபித்துள்ளனர். பிரசவத்திற்குப்பின் உடல் எடையைக் குறைக்க இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. நீங்கள் பால் கொடுக்கும் தாய்மார்கள் கட்டாயம் ஒரு நாளைக்கு 2800 - 3000 கலோரிகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கலோரிகள் ஊட்டச்சத்தான உணவுகளால் வரவேண்டும். காய்கறிகள், பழங்கள், சிகப்பு அரிசி, பால் போன்ற சத்தான உணவுகளை உண்ணுங்கள். பதப்படுத்தப்பட்ட பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவித்து விடுங்கள். அவை உங்கள் உடல் எடைக்கும் அதிகரிக்கும். மேலும், பால் கொடுப்பதாலும் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

* நார்சத்து, புரதச் சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளுங்கள். பால், பன்னீர், தயிர் போன்றவை புரதச் சத்து நிறைந்தவை அதேசமயம் கால்சியம் சத்தும் அதிகம். இது உங்கள் குழந்தையின் எலும்பு உறுதிக்கும் உதவும். நட்ஸ் வகைகளையும் அதிகமாக உண்ணுங்கள்.

* பால் கொடுப்பதால் உடலில் உள்ள நீர் உடனடியாகக் குறைந்துவிடும். அதனால் அதிகமாக தண்ணீர் குடிப்பது அவசியம். போதுமான தண்ணீர் அருந்துவது உங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றங்கள் வேகமாக நிகழும். அதனால் குறைந்தது 8 - 10 கிளாஸ் தண்ணீர் தினமும் அருந்துங்கள்.

* தினமும் உங்கள் முடிந்த அளவு உடற்பயிற்சிகளை செய்யுங்கள். வயிற்று பகுதியை குறைக்கும் உடற்பயிற்சிகளை தொடர்ந்த செய்து வருங்கள்.


Post Comment

Post Comment