சுவையான மீல்மேக்கர் கிரேவி செய்ய...!!


Posted by-Kalki Teamதேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் - 1/2 கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி - தேவையான அளவு

பால் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையான பொருள்கள்:

தேங்காய் - 2 மேசைக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1

தக்காளி - 2

தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

கொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல் மேக்கரைப் போட்டு சில நிமிடங்கள் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீல் மேக்கரை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள எஞ்சிய பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

பின் அதில் மீல் மேக்கரை சேர்த்து, முக்கால் கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிரேவியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லியைத் தூவினால், மீல் மேக்கர் கிரேவி தயார்.Post Comment

Post Comment