ரொனால்டோ நீக்கம் – ரமோஸ் வேகம்

ரொனால்டோ நீக்கம் – ரமோஸ் வேகம்

லகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் ஹாட்ரிக் அடித்திருக்கிறார் போர்ச்சுகல் அணியின்  இளம் வீரர் கோன்கலோ ரமோஸ்.  இதற்கு முன் இந்தச் சாதனையைச் செய்தவர் பிரேசில் அணியைச் சேர்ந்த பீலே.

தென்னாட்டு தேசிய அணியில் இடம்பெற்ற போதெல்லாம் பெரும்பாலும் பென்ச்சில் உட்கார்ந்திருந்தவர் (அதாவது மாற்று விளையாட்டு வீரராக மட்டுமே அறியப்பட்டவர்) ரமோஸ்.  ஆனால் சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் ஆடியபோது அணியின் பயிற்சியாளர் பெர்னான்டோ சான்டோஸ் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை அணியிலிருந்து வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக ரமோஸை ஆட வைத்தார்.  இது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.  ரொனால்டோ மீதி உலகக் கோப்பை போட்டிகளில் இடம் பெறாமல் போர்ச்சுக்கல் திரும்பிவிட எண்ணி இருப்பதாகவும் கூறினார்.

இந்த மாற்றம் என்ன விளைவை ஏற்படுத்தப் போகிறதோ என்று அனைவருமே ஆர்வத்துடன் பார்த்து இருக்க, ரமோஸ் ஹாட்ரிக் அடித்தார்.  போர்க்சுகல் அணி 6-1 கோல் கணக்கில் சுவிட்ஸர்லாந்தை தோற்கடித்து கால் இறுதிச்சுற்றில் இடம்பெற்றது.

ஒல்ஹவோ என்ற போர்த்துகீசிய நகரில் பிறந்தவர் ரமோஸ். இளம் வயதில் இருந்தே பெனிஃபிகா அணிக்காக விளையாடத் தொடங்கினார்.  தாக்கி விளையாடும் ஸ்டைலில் தன் தனித்துவத்தைக் காட்டினார்.  கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து உலக கோப்பை அணியில் இடம் பெற்றார்.  அப்போது கூட இவர் களத்தில் இறங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.  அதுவும் ரொனால்டோவுக்கு மாற்றாக!

ஸ்விட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் தன்னை நீக்கியவுடன் கொந்தளிப்பு மனநிலையில் இருந்தார் ரொனால்டோ.  அதை அதிகப்படுத்துவது போல் அமைந்தது, அணி நிர்வாகி ‘இனிவரும் உலககோப்பை போட்டி பந்தயங்களில் ரொனால்டோவின் பங்களிப்பு என்ன என்பதை இனிதான் தீர்மானிக்க வேண்டும்’ என்று கூறியது.  ‘ஒரு விளையாட்டு வீரரின் கடந்த காலத்தைப் பார்க்க வேண்டியதுதான்.  ரொனால்டோ ஒரு மிகச் சிறந்த விளையாட்டு வீரர்.  அணியின் கேப்டனாக இருந்தவர். இப்போது நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் குழுவின் ஒருமித்த நலன் குறித்துதான்’ என்று பூடகமாக குறிப்பிட்டார்.

பாதி போட்டியில் இருந்து ரொனால்டோ வெளியேற்றப் பட்டபோது அவர்தான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருந்தார்.  சுமார் 90 ஆயிரம் இருக்கைகள் நிரம்பிய அந்த மைதானத்தில் ‘ரொனால்டோ, ரொனால்டோ’ என்ற குரல்கள் தொடர்ந்து உரத்து ஒலித்தன.

ronaldo and ramos
ronaldo and ramos

ரமோஸ் ஹாட்ரிக் அடித்த பிறகு ரொனால்டோ அவருக்கு கைகுலுக்கினார்.  ரசிகர்களை நோக்கி கை தட்டினார் (அவர்கள் அணி வென்றதற்காக).  பின்னர் தனியாக அவர் திரும்பியபோது அவரது வருங்காலம் குறித்து ஒரு கேள்வி அவர் மனதில் எழுந்திருக்கும்.

37 வயதான ரொனால்டோ இப்போது எந்த க்ளப்புடனும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை.  மான்செஸ்டர் யுனைடெட் க்ளப் அணிக்காக விளையாடினார் என்றாலும் தற்போதைய உலகக் கோப்பை போட்டிகளுக்கு சற்று முன்பாக அந்த க்ளப்பை விட்டு நீங்கி விட்டார்.

கடந்த சில நாட்களில்...

குரோஷியாவை தோற்கடித்தது அர்ஜெண்டினா அணி.  இதன் ​மூலம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஜூலியன் அல்வாரெஸின் பிரேஸ் மற்றும் லியோனல் மெஸ்ஸியின் கோல்களினால் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியது. இதற்கு முன்னதாக  ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகளில் 25 முறை விளையாடிய சாதனைப் பதிவை லோதர் மத்தாஸ் மட்டுமே வைத்திருந்தார். இப்போது லியோனல் மெஸ்ஸியும் லோதர் மத்தாஸின் சாதனைப் பதிவில் இணைந்து கொண்டார். 

                                                              *************

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com