தேர்தல் பிரசாரத்தில் சுட்டு கொலை!

தேர்தல் பிரசாரத்தில் சுட்டு கொலை!

-ஜி.எஸ்.எஸ்.

ப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஜூலை 8-ம் தேதி நாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியொன்றில் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் உடனடியாக  ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு, சிகிச்சை பலனின்றி ஷின்சோ அபே உயிரிழந்துள்ளதாக அந்நாடு தகவல் அரிவித்ததது. . ஜப்பானின் நீண்ட கால பிரதமராக அறியப்படும் ஷின்சோ அபே,  நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.  அவர் படு கொலை செய்யப்பட்டதை  இன்னமும் கூட அங்கு பலரால் ஜீரணிக்க முடியவில்லை.

இதையடுத்து ஷின்சே அபேவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து 'இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும்.  ஜனாதிபதி மாளிகை,  நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் செங்கோட்டையில் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடும் விடப்படும்' என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் ஷின்சோ அபே முன்பு இந்திய அரசால் 'பத்ம விபூஷண் விருது'  அளித்து கவுரவிக்கப் பட்டவரும்கூட!

மேலும் ஷின்சோ அபே குறித்து பிரதமர் நரேந்திர மோடி விரிவாகவும் விளக்கமாகவும் பேசியதைத்  தொடர்ந்து, அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கு உண்டாகியிருக்கிறது. யார் ந்த ஷின்சோ அபே?

ஷின்சோ அபே ஜப்பானின் 90-வது பிரதமர். இவர் 2007-ல் செப்டம்பர் 12-ம் தேதி பதவியிலிருந்து அகற்றப்பட்டு யாசுவோ ஃபுக்குடா என்பவர் புதிய பிரதமரானார்.

ஷின்சோ அபே  2006-ல் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராக தெரியப்பட்டார்.  இவரது கட்சி ஜப்பானின் கீழ்சபையில் அறுதிப்பெரும்பான்மையோடு இருக்கிறது. அந்தக் கட்சியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார் ஷின்சோ அபே.

இச்சமயத்தில் ஷின்சோ அபே,  நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.  வரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  அவரது கொள்கைகள் பிடிக்காததால் அவரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர் கூறியுள்ளார். அவர் ஜப்பான் கடற்படையின் முன்னாள் வீரர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

எது எப்படியோ.. ஷின்சோ அபே ஜப்பான் பிரதமராக இருந்தபோது இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் வெளியுறவுக் கொள்கைகளை அழகுறக் கையாண்டார்.  ஜப்பானின் பொருளாதாரம் மெச்சும்படி இருந்தது. (சொல்லப்போனால் பொருளாதாரம் சார்ந்த அவரது கொள்கைகள் பிரபலாக அபேனாமிக்ஸ் ("Abenomics") என்றே அழைக்கப்பட்டன).  எனினும் 2020-ம் ஆண்டு முதல் கோவிட் காரணமாக ஜப்பானின் பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்ற போது ஷின்சோ கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இவர் செல்வாக்கு மிக்க பின்புலத்தில் வந்தவர்.பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா நுபுசிகே கிஷி ஜப்பானின் பிரதமராக ஒருகாலத்தில் இருந்தவர்.  அபேவின்  தந்தை ஷிந்தரோ அபே வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர்.

இவர் முதல் முதலாக 1993-ம் ஆண்டு ஜப்பான் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2006-ல் ஜப்பானின் பிரதமராக பதவியேற்றார். ஆனால் அவரது உடல் நலக்குறைவால்  தனது பதவியை குறைந்த காலத்திலேயே ராஜினாமா செய்தார். பின்னர் மீண்டும் 2012-ல் ஜப்பானின் பிரதமரானார். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் ஜப்பானின் பிரதமராக இருந்தார் ஷின்சோ.

ஜப்பானின் சர்ச்சைக்குரிய தளமான டோக்கியோவின் யசுகுனி ஆலயத்திற்கு (போர் நினைவு ஆலயம்) அவர் அவ்வப்போது  பயணம் செய்தார். இது ஜப்பானில் உள்ள இடதுசாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. தவிர  இது சீனாவுக்கும் தென் கொரியாவுக்கும் பெரும் கோபத்தை கொடுத்தது.

காரணம் தனது இரண்டு அண்டை நாடுகளான இவற்றின் பகுதிகளை ஜப்பான் ஆக்கிரமித்திருந்தது.  இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தான் ஆக்கிரமித்த பகுதிகளை திருப்பிக் கொடுத்தது.  எனவே போர் நிலையத்துக்கு எந்த ஜப்பானிய தலைவர் சென்று அஞ்சலி செலுத்தினாலும் அதை தங்கள் நாடுகளுக்குச் செய்யும் அவமரியாதையாகவே அந்த இரண்டு நாடுகளும் எண்ணுவது வழக்கம்.

ஜப்பான் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், தாக்குதலுக்கு உள்ளாகும் நட்பு நாடுகளை காக்கவும்  வெளிநாடுகளில் படையை அணிதிரட்ட அவர் முயற்சித்தார்.  பலரது எதிர்ப்பையும் மீறியும் ஷின்சோவின் இத்திட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கியது.

பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் பெனாசிர் பூட்டோ,  ஹைதி நடடின் அதிபர் ஜோவெனல் மோய்ஸ், சாட் நாட்டின் அதிபர் இட்ரிஸ் டெபி இட்னோ, லிபியாவின் சர்வாதிகாரத் தலைவர் கடாஃபி, செர்பியப் பிரதமர் ஜோரன் ஜின்ஜிக், நேபாள நாட்டின் அரசர் பீரேந்திரா, காங்கோ நாட்டின் அதிபர் கபிலா போன்ற பலரும் அரசியல் காரணங்களுக்காக படுகொலை செ​ய்யப்பட்டதுண்டு. எனினும் அபே நமக்கு ஸ்பெஷலானவர்.

ஜப்பானின் பிரதமராக ஷின்சோ அபே பதிவி வகித்தபோது, இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்,  நரேந்திர மோடி ஆகிய இருவரிடமும் மிக நட்பாகப் பழகி இருக்கிறார்  சீன அச்சுறுத்தல்களுக்கு எதிராக செயல்படும் திட்டங்களில் நாடுகளை ஒருங்கிணைப்பதில் அபேவும் இந்திய பிரதமர்களும் நெருக்கமாக இருந்தனர்.

பெண்களுக்கு அதிகாரக் குறைவு, ஊழியர்களுக்கெதிரான பணிச்​சூழல் ஆகியவற்றை மாற்ற பல்வேறு திட்டங்களை வைத்திருந்தார். சர்வதேச அளவில், டிரான்ஸ்-பசிபிக் கூட்டத்தில், பதினோரு  நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை  நடத்திக் காண்பித்தார்.

மேற்படி சிறப்புகளுக்காக நாட்டின் இரண்டாவது உயரிய பத்ம விபூஷன் விருதை இந்தியா அவருக்கு வழங்கியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com