0,00 INR

No products in the cart.

பீஸ்ட் படம் ரிலீஸ் : அலகு குத்தி .. பாலாபிஷேகம் செய்து தெறிக்க விட்ட ரசிகர்கள்!

-பிரமோதா.

 நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் உலகெங்கும் இன்று கோலாகலக் கொண்டாட்டத்துடன் ரிலீஸானது. முதல் நாள்.. முதல் ஷோ எப்படி?! தமிழகத்தில் பல ஊர்களில் ஒரு ரவுண்டப் இதோ…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  விஜய் நடித்து இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் உலமெங்கும் இன்று வெளியானது.

சென்னை ரவுண்டப்..

சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் இன்று காலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இதற்கான டிக்கெட்டைப் பெற்ற நேற்று நள்ளிரவு 12 மணிக்கே ரசிகர்கள் தியேட்டர்கள் முன் முண்டியடித்தனர்.  சென்னை ரோகிணி திரையரங்கத்தில 1000-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள், அரபிக் குத்து பாடலுக்கு உற்சாகமாக மேளதாளத்துடன் நடனமாடினர்.

அதே போல பீஸ்ட் திரைப்பட விஜய் கெட்டப்பில் காஸ்ட்யூம் அணிந்து வந்து கலக்கிய ரசிகர்கள் ஒருபுறம்.. விஜயின் ஆளுயர கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து, தவுசன்ட்வாலா பட்டாசு வெடித்து திருவிழா கொண்டாடிய ரசிகர்மன்ற கூட்டம் மற்றொருபுறம்.. என்று நள்ளிரவு முதலே அப்பகுதி அமர்க்களப்பட்டது.

சென்னை குரோம்பேட்டையிலுள்ள வெற்றி திரையரங்கில் காலை 4 மணி சிறப்பு காட்சிக்கு பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், நடிகை பூஜா ஜெக்டே, பிரியங்கா மோகன், நடிகர் கவின், விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த், சன் பிக்சர்ஸ் குழுமத்தினர் வந்திருந்தனர். ரசிகர்கள் ஆரவாரத்தோடு அனிருத்தை சூழ்ந்துகொள்ள அந்த இடமே ஜாலிலோ ஜிம்கானாதான்.  திரையில்  ‘தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் ‘ என காட்சிகள் வந்த போது ரசிகர்களின் கரவொலியும் விசில் சத்தமும் விண்ணைப் பிளந்தன.

‘’கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் படம் பார்த்தால்தான்.பார்த்த மாதிரி..’’ என்று கூடிய ரசிகர்களால் அந்த இடமே நேற்றிரவு முதல் .. டிராபிக் ஜாம்! ‘’ தளபதி படம்னா சும்மாவா?! இப்படி தான்.. ஜாலியாக அனுபவிக்கனும்..’’ என்று உற்சாகமாகிவிட்டனர் ரசிகர்கள.

படம் பார்க்க வந்தவர்களுக்கு பெட்ரோலை இலவசமாக வழங்கியும் அதிரவைத்தனர்..

படம் முடிந்து வெலியே வந்தவர்களிடம் ‘’படம் எப்படி?” என்று கேட்டோம். ’’சூப்பர்..’’ என்று மாஸ். கோரஸாக பதில் வருகிறது..”’அதுவும் அந்த ஹைஜாக் சீன் சான்ஸே இல்லை..’’ என்று அடுக்கி கொண்டே போன ரசிகர்களிடம், ‘’போதும்..போதும்..சஸ்பென்ஸ் அப்படியே இருக்கட்டும்’’  என்று கட் செய்தோம்.

கோயம்புத்தூர் ரவுண்டப்

கோவையில் இன்று 40 திரையரங்குகளில் பீஸ்ட் வெளியாகியுள்ளது.

திரையரங்குகள் முன்பு விஜய் கட்அவுட்டுக்கு 30 அடி உயர மெகா சைஸ்  மாலை, அரங்க வாயிலில் கலர் தோரணங்கள் என்று கோலாலகலம். இஜய் கட்-அவுட்டுக்கு பூசணிக்காய், தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்த ரசிகர்கள் வேறொரு பக்கம்.. மொத்தத்தில் கோவை மக்களுக்கு இன்று மெகா பண்டிகைதான்!

மதுரை ரவுண்டப்

மதுரையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த திரைப்படம் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

மதுரை காளவாசல் பகுதியிலுள்ள மிட்லண்ட் தியேட்டரில்,  இன்று  பீஸ்ட் படம் வெளியானதும், அப்பகுதியையே மினி சித்திரை திருவிழாவாக மாற்றி விட்டனர் ரசிகர்கள். விஜய் கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம், படம் வெற்றியடைய 108 தேங்காய் உடைப்பது, அப்படத்தின் பாடலுக்கு குத்தாட்டம் என்று அப்பக்தி மக்களை அதிர வைத்தனர்.

அலகு குத்தி ஊர்வலம்..

மேலும் இப்பகுதி விஜய் மக்கள் மன்றம் சார்பில்  அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தியது வேற லெவல். மேலும் பெண் ரசிகைகள் மேளதாளத்துடன் குத்தாட்டம் போட்டு ஊர்வலம் வந்தது செம மாஸ்!

‘’என்ன இருந்தாலும் இப்படி அலகு குத்தி கொள்வதெல்லாம்..கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா?’’ என்று கேட்டோம்.

அவ்வளவுதான்.. நம்மை மேலும் கீழுமாக பார்த்த ரசிகர்கள் சொன்னார்கள்.

இயக்குனர்.. இசையமைப்பாளர்

‘’சினிமாவின்…நடிகர்களின் மீதான காதல்.. ஈர்ப்பு இது! நமக்கு பிடித்தவர்கள், வேண்டப்பட்டவர்களுக்காக நேர்த்திக்கடன் செய்வதில்லையா?! இதுவும் அதுபோலத்தான்.. நடிகர் விஜய் எங்கள் சகோதரர் போல.. அவருக்காக இதுகூட செய்யக் கூடாதா?” – பளிச்சென்று பதில் வருகிறது

விஜய் மக்கள் மன்றம் மற்றும் மதுரை மாவட்ட தொழிற்சங்க செயலாளரான சதீஷ் நம்மிடம் பேசினார்..

‘’எங்களுக்கு பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் என்று எல்லா பண்டிகை கொண்ட்டாட்டமும் இந்த பட ரிலீஸ்தான்! ஒன்றரை வருடங்களுக்கு பின் தளபதி விஜயின் படம் வெளிவந்துள்ளது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த படம் கேஜிஎப் படத்துக்குப் போட்டி என்று சொல்வதே தவறு.. சன் பிக்சர்ஸ்- தளபதி கூட்டணியில் இப்படம் மெகா வெற்றியடையும்’’ என்றார் சதீஷ்.

மொத்தத்தில் சினிமா என்பது தமிழர் ரசிகர்களின் உணர்வோடு கலந்த ஒன்று.. தங்களின் அன்றாடக் கவலைகளுக்கு மாற்றாக ஒரு வடிகால் போன்று தமக்கு பிடித்த ஹீரோக்களின் படங்களை திருவிழா போல கொண்டாடி தீர்த்து விடுவார்கள் என்பது புரிகிறது.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: கமல்ஹாசனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

0
-வீர ராகவன். பிரான்ஸ் நாட்டில் நேற்று (மே 17) கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் தமிழ்த் திரைத் துறை நட்சத்திரங்களான கமல்ஹாசன், மாதவன் மற்றும் இசைப்புயல் ஏஆர்...

குருவின் பல்லக்கு பவனி..வைபவத் திருநாள்!

0
-சக்தி சாமிநாதன். தருமபுர ஆதீனம் பட்டிணபிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்குதலுக்கு தமிழக அரசு தடைவிதித்து, பின்னர் தடையை நீக்கி உத்தரவிட்டது. இச்சம்பவம்  இன்று, உலகம் முழுவதும் உள்ள ஆன்மீகவாதிகளிடம் பரபரப்பு ஏற்படுத்தியது.  சுமார் 15-ம் நுற்றாண்டிலிருந்து...

100 நாட்களுக்குப் பின் மகள் வந்தாள்; நடிகை பிரியங்கா சோப்ரா!

0
பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் கோலோச்சும் நடிகை பிரியங்கா சோப்ரா, வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த தனது குழந்தையின் படத்தை முதன்முதலாக பகிர்ந்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனசும் கடந்த 5...

மகரிஷி சரக் சபத்; மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி சர்ச்சை!

0
- சவுமியா சந்திரசேகரன். மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வெள்ளை அங்கி அணிந்து  ‘சரக் சபத்’ உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை ஏற்பட்டது. அதை தொடர்ந்து ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியிலும் இதே உறுதிமொழி எடுக்கப்பட்டதாக செய்திகள்...

பீஸ்ட்டில் நடித்தது கனவு மாதிரி இருக்கு: சுஜாதா பாபு!

0
-பிரமோதா. பீஸ்ட் படத்தில் நடிகை அபர்ணா தாஸின் அம்மாவாக நடித்தவரைப் பார்க்கும்போது, ‘அட..இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே.’ என்று பலருக்கும் தோன்றியிருக்கும். அடுத்த நிமிடமே  ‘சன் டிவி நியூஸ் ரீடராச்சே இவங்க..’ என்று பொறி தட்டியிருக்கும்..யெஸ்..சன்...