இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடிகை ராதிகாவுக்கு சாதனை விருது!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடிகை ராதிகாவுக்கு சாதனை விருது!
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடிகை ராதிகா சரத்குமாருக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப் பட்டது.
தமிழ்த் திரைத்துறை, மற்றும் சின்னத் திரை உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார்.
தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர். அந்த வகையில் இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களில் நடிகை ராதிகாவும் ஒருவர்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்த சாதனையாளர் விருது பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும்  பெருமையும் நிரம்பிய தருணம். இந்த விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக் குழுவினருக்கு நன்றி. மேலும் தமிழ்த் திரையுலகில் இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், மற்றும் என்  குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி.
– இவ்வாறு ராதிகா சரத்குமார் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மனம் நெகிழ்ந்து பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com